Need:
- தக்காளி - 10
- காய்ந்த மிளகாய் - 5
- பூண்டு - 5 பல்
- நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
- கடுகு, உளுந்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - தேவைக்கேற்ப
Process:
முதலில் தேவையானவற்றை அனைத்தையும் தயார்படுத்தி வைக்கவும்.
தக்காளி, பூண்டு, மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் வற்றி எண்ணெய் மேலாக வரும் வரை கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கினால் சுவையான கார சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment