Need:
- மைதா மாவு - கால் கிலோ
- உப்பு - ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் - அரை தேக்கரண்டி
Process:
முதலில் சோளா பூரி செய்ய தேவையானவைகளை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
மைதா மாவுடன் உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
பிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி எடுத்துக்
கொள்ளவும். அதை சப்பாத்தி கட்டையில் வைத்து நன்கு பெரிதாக தேய்த்துக்
கொள்ளவும்.
தேய்த்ததும் வட்டமாக வருவதற்கு ஒரு வட்டமான மூடியை மாவில் வைத்து அழுத்தி வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு வெள்ளை நிறத்தில் பொரித்து எடுக்கவும்.
சுவையான சோளா பூரி தயார். விரும்பிய குருமா அல்லது சன்னா மசாலாவுடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment