Monday, 13 February 2017

கோழி ரசம்

Need:
  • எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் - 1/4 கிலோ
  • நல்லெண்ணெய் -5 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 1 கப்
  • தக்காளி - 2
  • மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
  • பூண்டு - 10 பல்
  • கொத்தமல்லித் தழை - சிறிதளவு
  • கறிவேப்பிலை - 10 இலைகள்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • வறுத்து பொடிக்க
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • சோம்பு - 1/4 டீஸ்பூன்
  • தனியா - 1/2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 2
Process:
வாணலியில் பொடித்த மிளகு, சீரகம், சோம்பு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து எண்ணெய் விடாமல் சிறிது நேரம் வறுத்து பொடி செய்யவும். பூண்டை தட்டி வைக்கவும். குக்கரில் எண்ணெய் சேர்த்து சிக்கனை லேசாக வதக்கவும்.

இத்துடன் கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

ரசத்திற்கு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிக்கனை 2 விசில் வரை வேக வைக்கவும்.

சிக்கன் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

கொத்தமல்லித்தழை தூவவும். கோழி ரசம் ரெடி.

வெஜ் ஆம்லேட்

Need:

  • குடைமிளகாய் - 1 (பெரியது)

  • கடலை மாவு - 1/2 கப்

  • மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி

  • கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி

  • பெரிய வெங்காயம் - 1

  • கேரட் - 1

  • கொத்தமல்லி தழை - சிறிதளவு

  • உப்பு - தேவைக்கேற்ப

  • எண்ணெய் - தேவைக்கேற்ப
Process:
தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

குடைமிளகாய், விதையை நீக்கி விட்டு வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். மீதமாகும் மேல் பகுதி மற்றும் கீழ்ப் பகுதியை பொடியாக வெட்டவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும்.

மாவில் எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி உப்பு சேர்த்து கரைக்கவும். (பஜ்ஜி மாவு பதமாக)

தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு குடைமிளகாயை வைத்து நடுவில் கரைத்த மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக விடவும்.

வெந்ததும் திருப்பி போட்டு நன்றாக சிவக்க வேக வைத்து எடுக்கவும். மீதியையும் இது போலவே போட்டு எடுக்கவும்.

சுவையான கேப்ஸிகம் வெஜ் ஆம்லேட் ரெடி.

மீன் குழம்பு

Need:
  • மீன் - அரை கிலோ
  • புளி - பெரிய எலுமிச்சை அளவு
  • மிளகாய்தூள் - 6 ஸ்பூன்
  • சீரகம் - அரை டீஸ்பூன்
  • வெந்தயம் - அரை டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
  • பச்சை மிளகாய் - 2
  • தக்காளி - 3
  • பூண்டு - 2 முழு பூண்டு
  • தேங்காய் - 2 துண்டுகள்
  • கொத்தமல்லித்தழை - சிறிது
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
சின்ன வெங்காயம் 10 எடுத்து துருவிய தேங்காயுடன் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மீதமுள்ள வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

இத்துடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும்.

பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.

குழம்பு நன்கு கொதித்து சுண்டியதும் மீனை இதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.

மீன் வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவவும். மீண்டும் நல்லெண்ணெயில் தாளித்து இறக்கவும்.

சுவையான மீன் குழம்பு தயார்.

தினை ஆப்பம்

Need:
  • தினை - 2 கப்
  • இட்லி அரிசி - கால் கப்
  • வெள்ளை உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் - 1 ஸ்பூன்
  • தேங்காய்ப் பூ - 1/2 கப்
  • வடித்த சாதம் - ஒரு கைப்பிடி
  • உப்பு - தேவைக்கு
  • சர்க்கரை - 2 ஸ்பூன்
  • கஞ்சி காய்ச்ச :
  • பச்சரிசி - 2 ஸ்பூன் (தனியே ஊற வைக்கவும்)
Process:
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.

முதலில் தினையுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அத்துடன் தேங்காய் மற்றும் வடித்த சாதம் சேர்த்து நைசாக அரைக்கவும்.

தனியே ஊற வைத்த பச்சரிசியை மிக்ஸியின் சிறிய ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

அத்துடன் தண்ணீர் சேர்த்து மோர் பதத்திற்கு கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். (கிளறுவதை நிறுத்தி விட்டால் கட்டி தட்ட ஆரம்பிக்கும்)

சிறிது நேரத்தில் சூடேறியதும் மாவு பசை போன்ற பதத்திற்கு இறுக தொடங்கும். அப்போது அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.

சூடு தணிந்ததும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள ஆப்ப மாவுடன் கலந்து விடவும். உப்பும் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கி மாவை புளிக்க விடவும்.

மறுநாள் மாவு புளித்து நன்கு பொங்கியிருக்கும். மாவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தளர்வாக கலக்கவும்.

தேவையான மாவை ஆப்ப சட்டியில் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும். ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.

சத்தும், சுவையுமிக்க தினை ஆப்பம் தயார்.

குடைமிளகாய் பொரியல்

Need:
  • குடைமிளகாய் - 3
  • வெங்காயம் - 1
  • பொட்டு கடலை - 3 ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க:
  • எண்ணெய்
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • உளுத்தம் பருப்பு
Process:
குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கவும்.

பொட்டுக்கடலையை பொடித்து வைக்கவும்.

கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

அத்துடன் தூள் வகைகளை சேர்த்து கிளறவும்.

பின் குடமிளகாயுடன் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

பின் பொடித்து வைத்த பொட்டு கடலைப் பொடியை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான குடை மிளகாய் பொரியல் தயார்.